வேர்கிளம்பி அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
வேர்கிளம்பி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
குமாரபுரம்,
காட்டாத்துறை அருகே நெடியங்கோடு, மேல்விளையை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மகன் ரெஞ்சித் குமார் (வயது19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக ரெஞ்சித் குமார் விடுமுறை நாட்களிலும், முகூர்த்த தினங்களிலும் திருமண வீடுகளில் கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சித்திரங்கோட்டில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் வேறு சில நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் வேர்கிளம்பி அருகே முண்டவிளை பகுதியில் சென்ற போது, எதிரே ஒரு டாரஸ் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், ரெஞ்சித் குமார் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் ரெஞ்சித்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, நண்பர்கள் விரைந்து செயல்பட்டு ரெஞ்சித் குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஏட்டு மோகன்தாஸ் வழக்குப்பதிவு செய்தார். மேலும், லாரி டிரைவர் நித்திரவிளையை சேர்ந்த ராஜேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story