பெண் போலீசாரையும் ரோந்து காவலர்களாக நியமிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


பெண் போலீசாரையும் ரோந்து காவலர்களாக நியமிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Dec 2017 12:08 AM GMT (Updated: 13 Dec 2017 12:08 AM GMT)

புதுவையில் பெண் போலீசாரையும் ரோந்து செல்லும் காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் ரோந்து செல்லும் காவலர்கள் (பீட் ஆபீசர்கள்) குற்ற சம்பவங் களை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு போலீசாருக்கு ஆலோசனை களை வழங்கி பேசினார். மேலும் ஏனாமில் கோதாவரி ஆற்றில் விழுந்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர் கேசவராவ் கவுரவிக்கப்பட் டார். நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரன், அபூர்வா குப்தா, காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் மற்றும் அதிகாரிகள், போலீசார் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர் களிடம் கூறியதாவது:-
யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி குற்ற சம்பவங்கள் அதிகமில்லாத பகுதியாக உள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க பீட் ஆபீசர்கள் அதிக அளவில் ரோந்து செல்கின்றனர். இதனால் குற்றங்கள் தடுக்கப்படுகிறது. புதுவையில் பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசாரும் அதிக அளவில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர். பெண் போலீசாரையும் ரோந்து செல்லும் காவலர்களாக நியமிக்கவேண்டும். இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுவையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையை தடுக்க அமைச்சரவையை கூட்டியிருக்க வேண்டும். கூட்டத்தில் மாநில நிதியை உயர்த்தி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கவேண்டும்.

அரசு நிறுவனங்களை லாபகரமாக இயக்கவும், லாபகரமான நிறுவனங்களை புதுவைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு ஊழியர் களுக்கு சம்பள நிலுவைத் தொகை வழங்குவது குறித்து நிதித்துறை செயலாளர் முடிவெடுப்பார். இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Next Story