ஊதிய உயர்வு கேட்டு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு கேட்டு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-14T00:27:39+05:30)

திண்டுக்கல் அருகே சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின்ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின்ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் திட்ட தலைவர் உமாபதி தலைமை தாங்கினார். மேலும் செயலாளர் ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் கருணாநிதி, மாரிமுத்து, சின்னப்பன் உள்பட மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். களப்பணியாளர் பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story