திண்டுக்கல்லில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2017 2:45 AM IST (Updated: 14 Dec 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணராஜன், பொருளாளர் செந்தில்நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் நிர்மலா, விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் எழுத்தராக பணிபுரியும் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நீதிமன்ற ஊழியர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.


Next Story