விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2017 1:15 AM IST (Updated: 14 Dec 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் அம்பிகாபதி, துணைத்தலைவர் புருஷோத்தமன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் சேகர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலையை குறைக்க வேண்டும், ஆன்–லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக்கூடாது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தையும், தீர்ப்பையும் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் ராமதாஸ், அருள்ஜோதி, அய்யப்பன், சகாதேவன், மெஹராஜ்பேகம், நிஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட செயலாளர் வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story