கடலூரில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம், உணவு, உர மானியத்தை குறைத்தல், பொது வினியோக முறையை பலப்படுத்த வேண்டும். உதவித்தொகை கேட்டு நலவாரியத்தில் விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு உடனடியாக தொகையை வழங்காமல் கால தாமதம் செய்தல் போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பையன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட துணை தலைவர்கள் ஆளவந்தார். சாவித்திரி, மாவட்ட இணை செயலாளர்கள் பாபு, ஜெயராமன், அனந்தநாராயணன், திருமுருகன், தேசிங்கு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.