கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்
நாம் தமிழர் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாமிரவி, ஒன்றிய செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
ஒகி புயலில் சிக்கி பல்வேறு பகுதிகளில் மாயமான மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், புயலில் பல்வேறு தீவுகளில் தஞ்சம் அடைந்துள்ள மீனவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கி பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் குப்புசாமி, இளைஞர் பாசறை திரு, நகர துணை தலைவர் கண்மணி, பண்ருட்டி நகர செயலாளர் வெற்றி, துணை செயலாளர் தெய்வமணி, குறிஞ்சிப்பாடி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.