பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பைனான்ஸ் அதிபர் சாவு


பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பைனான்ஸ் அதிபர் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2017 2:15 AM IST (Updated: 14 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பைனான்ஸ் அதிபர் தவறி விழுந்து இறந்தார்.

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு அடுத்த பாண்டிநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 40). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

தனசேகர் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் ஆ.ர்.கே.பேட்டை சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு அவர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆ.ர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் இறங்கிய போது தனசேகர் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த தனசேகர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி ஆ.ர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story