தீக்குளித்த கூட்டுறவு பண்டகசாலை பெண் ஊழியர் சாவு


தீக்குளித்த கூட்டுறவு பண்டகசாலை பெண் ஊழியர் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2017 4:30 AM IST (Updated: 14 Dec 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே தீக்குளித்த கூட்டுறவு பண்டகசாலை பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஈசணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி இந்திராதேவி (வயது43), நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

இவர் விற்பனை தொகையை குறைவாக கட்டியதாக கூறி, கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்றுமுன்தினம் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்திராதேவி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய கணவர் அம்மையப்பன் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story