அண்ணன்-தம்பியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு


அண்ணன்-தம்பியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 14 Dec 2017 3:30 AM IST (Updated: 14 Dec 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

அண்ணன்-தம்பியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு

உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன்கள் வேல்முருகன் (வயது 38), ராஜமாணிக்கம் (35). அதே பகுதியை சேர்ந்த ராதா மகன்கள் இளையராஜா (35), சுப்பிரமணியன் (30). இவர்களுக்கு இடையே பொது பாதையில் நடந்து செல்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இளையராஜா, சுப்பிரமணியன் உள்பட 7 பேர் சேர்ந்து வேல்முருகன், ராஜமாணிக்கம் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வேல்முருகன், ராஜமாணிக்கம் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வேல்முருகன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜா, சுப்பிரமணியன் உள்பட 7 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story