8–ம் வகுப்பு மாணவியை 300 தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு


8–ம் வகுப்பு மாணவியை 300 தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 14 Dec 2017 2:54 AM IST (Updated: 14 Dec 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

கோலாப்பூர் மாவட்டம் சந்த்காட் தாலுகா கன்னூர் புத்ரூக் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அஸ்வினி (வயது 45).

மும்பை,

கோலாப்பூர் மாவட்டம் சந்த்காட் தாலுகா கன்னூர் புத்ரூக் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அஸ்வினி (வயது 45). 8–ம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் சரியாக படிக்கவில்லை என்பதற்காக அவர்கள் 300 தோப்புக்கரணம் போடுமாறு ஆசிரியை அஸ்வினி கூறினார். இதனால், மாணவர்கள் 300 முறை தோப்புக்கரணம் போட்டனர்.

இதில், ஒரு மாணவிக்கு பயங்கர வலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவளை தோப்புக்கரணம் போட வைத்து தண்டித்த ஆசிரியை மீது அவளது தந்தை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, ஆசிரியை அஸ்வினிக்கு பள்ளிக்கூட நிர்வாகம் கட்டாய விடுப்பு வழங்கியது.


Next Story