‘இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்தை தழுவுங்கள்’ ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்


‘இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்தை தழுவுங்கள்’ ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Dec 2017 9:31 PM GMT (Updated: 2017-12-14T03:01:26+05:30)

‘இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்தை தழுவுங்கள்’ என்று தலித் மக்களுக்கு ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை,

இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இந்து மதத்தில் தலித் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை உறுதியாக நம்பிய பின்னர் தான் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். லட்சக்கணக்கான தலித் மக்களும் அவருடன் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு தீவிர இந்துத்வவாதிகளுக்கு அவர் சந்தர்ப்பம் அளித்தார்.

ஆனாலும், திருத்தம் கொண்டு வரப்படவில்லை. இதனால், தான் அவர் புத்த மதத்தை தழுவினார். தலித் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வர, அவர்கள் அனைவரும் இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்தை தழுவ வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுப்பதை தவிர்த்து புத்த மதத்துக்கு மாறட்டும்.

இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.


Next Story