மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு


மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2017 4:30 AM IST (Updated: 14 Dec 2017 11:51 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று ஏராளமான திருநங்கைகள் திரண்டு வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

சென்னை,

திருநங்கைகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை வருகிற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர உள்ளது. இந்த மசோதாவில், பிச்சை எடுத்தால் கிரிமினல் குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு யாரும் வேலைவாய்ப்பு தர மறுக்கின்றனர் வேறு வழியின்றி பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எனவே புதிய மசோதாவை அமல்படுத்தக்கூடாது.

எங்களை பெற்றவர்கள் கைவிட்டுவிட்டார்கள். தற்போது அரசாங்கமும் கைவிட்டு விடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது கையில் தட்டுடன், வாயில் கருப்பு துணியை கட்டியபடி பல திருநங்கைகள் காணப்பட்டனர்.

Next Story