துறையூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
துறையூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சொரத்தூரைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). இவருக்கு திவ்யா(26) என்ற பெண்ணுடன் கடந்தமூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு சர்வின் என்ற ஒரு வயது ஆண்குழந்தை உள்ளது.சசிக்குமார் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டு கடந்த அக்டோபர் மாதம் 15 நாள் விடுமுறையில் வந்தார்.மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று மனைவி திவ்யா கூறியதாக கூறப்படுகிறது.இதனால் சொரத்தூரிலேயே வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் மீண்டும் வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து வந்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சசிகுமார் வயலுக்கு சென்றுவிட்டு காலை உணவு சாப்பிடுவதற்காக திரும்ப வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள உத்திரத்தில் திவ்யா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திவ்யாவை துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.