உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கணவன்- மனைவி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு 3 பேர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உசிலம்பட்டி,
பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள குடிசேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 58) விவசாயி. இவர் தனது வீட்டின் முன்பு உள்ள பாதையை அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக உசிலம்பட்டி ஆர்.டி.ஒ.விடம் மனு கொடுத்துள்ளார். இவரது மனுவை பரிசீலனை செய்த ஆர்.டி.ஒ. உடனடியாக சர்வே செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை அகற்றிக்கொடுக்க பேரையூர் தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பேரையூர் துணை தாசில்தார், சர்வேயர் மற்றும் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டணம்பட்டிக்குச் சென்று இடத்தை அளவீடு செய்தனர். பின்னர் அதிகாரிகள் தரப்பில் ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் குமார் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.விடம் இடத்தை அளவீடு செய்த வருவாய்த்துறையினர் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குமார் நேற்று உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார். பின்னர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார். உடனே உசிலம்பட்டி நகர் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். மேலும் குமாரை ஆர்.டி.ஓ. சுகன் அழைத்து சமரசம் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து குமாரின் வீடு முன்பு உள்ள பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் லட்சுமணன் (35), அவரது மனைவி சுமதி (30) ஆகிய இருவரும் திடீரென்று ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு வந்து தீக்குளிக்க முயன்றனர். இதனையடுத்து அலுவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தீக்குளிக்க முயன்ற குமார், லட்சுமணன், சுமதி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story