நெல்லை அரசு மருத்துவமனையில் கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் ஆய்வு
நெல்லை அரசு மருத்துவமனையில் கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தினந்தோறும் காலையில் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அப்போது வீடு, வீடாக செல்லும் அவர், அங்கு குடிநீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் உள்ளதா? டயர்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறதா? என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்கிறார். மேலும் கல்வி நிறுவனங்கள், கடைகள், புதிய கட்டிடங்கள் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்கிறார்.
அப்போது டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் கண்டறியப்படும் நிறுவனங்கள், கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை நெல்லை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகளை ஆய்வு செய்தார். அவர், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பல இடங்களை பார்வையிட்டார். அப்போது மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரித்துக் கொள்ளும்படி, டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், நெல்லை சுகாதார பணிகளின் துணை இயக்குனர் செந்தில்குமார், நெல்லை மாநகர நல அலுவலர் பொற்செல்வன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story