ஒரு ஆண்டுக்குள் அரசில் இருந்து சிவசேனா வெளியேறும் ஆதித்ய தாக்கரே பேச்சு
“மராட்டிய அரசில் இருந்து ஓராண்டுக்குள் சிவசேனா வெளியேறும்” என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
சிவசேனா சார்பில் நேற்று அகமத்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது:-
மராட்டியத்தில் கல்வி சம்பந்தப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுடன் இன்னமும் என்னை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சிவசேனா தீர்க்கமாக இருக்கிறது.
இன்னும் ஓராண்டுக்குள் மராட்டிய அரசில் இருந்து சிவசேனா வெளியேறும். தனது சொந்த பலத்தில் மீண்டும் சிவசேனா ஆட்சியமைக்கும். அரசில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் என்பது பற்றி கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு எடுப்பார். அரசில் இருந்து சிவசேனா வெளியேறியதும், மாற்றம் கொண்டு வர கட்சி தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

Related Tags :
Next Story