ஆத்தங்கரை பள்ளி வாசல் கந்தூரி விழா திரளானோர் கலந்து கொண்டனர்
ஆத்தங்கரை பள்ளிவாசலில் நேற்று நடந்த கந்தூரி விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்
திசையன்விளை,
ஆத்தங்கரை பள்ளிவாசலில் நேற்று நடந்த கந்தூரி விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
கந்தூரி விழா
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளி வாசல் உள்ளது. இங்குள்ள ஹசரத்சேகு முகமது (ஒலி), ஹசரத் சையதலி பாத்திமா (ரபி) தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று அதிகாலை கத்முல்குர் ஆன் ஓதலுடன் தொடங்கியது. தொடர்ந்து குர்ஆன் தமாம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து பேண்டு வாத்தியம் முழங்க, யானை மீது சந்தனகுடம், கொடி ஆகியவற்றை பரம்பரை டிரஸ்டி ஹபிபுர்ரகுமான் பிஜிலி, அஜிம் அகமது பிஜிலி, ஆகியோர் ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து வந்தனர்.
ஊர்வல வழியில் ராமன்குடி முத்துகிருஷ்ணாபுரம் அருள்துரை நாடார் வீட்டில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு உணவு பொட்டலங்கள், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு சந்தணகுடம் ஊர்வலம் தர்காவை அடைந்தது. அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் நாரே நக்குபீர் அல்லாகு அக்பர் என கோஷமிட்டு வரவேற்றனர்.
நேர்ச்சை வினியோகம்
தொடர்ந்து யானை மீது இருந்தவாறு பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் தர்கா முன்பு மூன்று இடங்களில் கொடியேற்றி வைத்தனர். பின்பு பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர்ரகுமான் பிஜிலி ஆகியோர் தலைமையில் ஹசரத் சேகு முகமது, ஹசரத் செய்யதலி பாத்திமா ஆகியோர் நினைவிடங்களில் சந்தனம் மெழுகுதல் மற்றும் மலர்களான போர்வை போர்த்துதல் முதலியவை நடந்தது. மாலையில் மவ்லூது ஷரிப் ஓதுதல், ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்நு மஜ்லிஸ் நடந்தது.
இரவு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று அதிகாலை சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆத்தங்கரை பள்ளி வாசல் டிஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர். கந்தூரி விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story