தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்


தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:00 AM IST (Updated: 16 Dec 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

சென்னை,

சோனியாகாந்தி சமீப காலங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 11-ந்தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் முறைப்படி நேற்று கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் பொறுப்பு ஏற்றதை நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்திபவனில் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், செய்தி தொடர்பாளர் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறும்போது, ‘வருகின்ற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வழிகாட்டுதலின் படி முன்னேறுவோம். ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது தான் எங்களுடைய முதல் லட்சியம். ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டனும் அதை விரும்புகிறான். தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்’ என்றார்.

Next Story