தேனியில் பாட்டாளி மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப்பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சுசி.கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story