தேனியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தேனியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 3:15 AM IST (Updated: 17 Dec 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 1–12–2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். களப்பிரிவு ஊழியர்களுக்கு கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் திட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.


Next Story