அரிவாள்-கோடரி உள்ளிட்ட இரும்பு கருவிகளை செய்து விற்கும் வடமாநில குடும்பத்தினர்
பெரம்பலூரில் அரிவாள், கோடரி உள்ளிட்ட இரும்பு கருவிகளை செய்து விற்கும் வடமாநில குடும்பத்தினரிடமிருந்து அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
பெரம்பலூர்,
நாம் அன்றாட வாழ்க்கையில் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களால் ஆன பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். இதில் உலோகங்களின் ராஜா என அழைக்கப்படும் இரும்பு உலோகத்திற்கு தனி இடம் உண்டு. இரும்பு கடினமானதாக இருப்பதால் தான் அதன் மூலம் செய்யப்படும் அரிவாள், மரம் வெட்ட உபயோகப்படும் கோடரி, இறைச்சிகளை வெட்டும் கத்தி, சிற்பம் செதுக்கும் உளி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இரும்பு பட்டைகள், கம்பிகளை அடுப்புக்கரியினுள் வைத்து சூடேற்றி அதற்கு பொருள் வடிவம் கொடுக்கும் தொழிலை செய்வோர் “கொல்லர்” என அழைக்கப்பட்டனர். தங்கத்தை உருக்கி செயின், மோதிரம் உள்ளிட்ட வடிவமைப்பவர் “பொற்கொல்லர்” என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பரம்பரை பரம்பரையாக இரும்பு கருவிகள் செய்வதை தொழிலாக கொண்டு வாழும் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 2 வடமாநில குடும்பத்தினர் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தையொட்டி கொட்டகை அமைத்து தங்கி அரிவாள், கத்தி, கோடரி உள்ளிட்ட இரும்பு கருவிகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். சூடேற்றப்பட்டு இரும்பு பட்டையின் தன்மை இளகியவுடன் 2 பேரை சம்மட்டி அடிக்க விட்டு அதற்கு லாவகமாக வடிவம் கொடுக்கின்றனர். பின்னர் தங்கள் கைவண்ணத்தில் உருவான இரும்பு கருவிகளான அரிவாள், கோடரி, கத்தி உள்ளிட்டவற்றை அங்கு தரையில் பரப்பி வைத்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கின்றனர்.
அரிவாள் உள்ளிட்ட கருவிகள் வெளிப்படையாக செய்யப்படுவதை கண்டதும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் அதனை வேடிக்கையாக பார்வையிட்டு செல்கின்றனர். விவசாயிகள், பொதுமக்கள் உள்பட சிலர் தங்களுக்கு தேவையான கருவிகளை ஆர்வத்துடன் வாங்கியும் செல்கின்றனர்.
அந்த வடமாநில குடும்பத்தினர் செய்து விற்கும் இரும்பு கருவிகளின் விலை விவரம் வருமாறு:-
அரிவாள்- ரூ.400, ரூ.350, பெரிய கோடரி- ரூ.700, ரூ.500, இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தி- ரூ.200, ரூ.100, களைவெட்ட பயன்படுத்தப்படும் கருவி- ரூ.400, ரூ.200, உளி-ரூ.100, விறகினை பிளக்கும் வெட்டரும்பு-ரூ.150, ஆட்டுக்கு கருவேலக்காய் பிடுங்க தொரட்டியில் கட்டப்படும் சிறிய அரிவாள்- ரூ.100 என்று விற்பனை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த வடமாநில குடும்பத்தினரிடம் கேட்ட போது கூறுகையில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நாங்கள் வயிற்று பிழைப்புக்காக ரெயில் ஏறி தமிழகத்திற்கு வந்தோம். பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இரும்பு கருவிகளை வெட்டவெளியாக செய்து விற்கிறோம். இரும்பு கருவி செய்வதை தத்ரூபமாக பார்க்கும் மக்கள் ஆர்வத்துடன் அதனை வாங்கி செல்கின்றனர். இதற்கு முன் அரியலூரில் விற்பனை செய்து வந்தோம். தற்போது பெரம்பலூரில் வியாபாரம் நன்றாக போய்கொண்டிருக்கிறது. வயிற்று பிழைப்பு ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரிய தொழில் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த தொழிலை விடாமல் செய்து மக்களுக்கு பயனுள்ள கருவிகளை வழங்கி வருகிறோம் என கூறினர்.

Related Tags :
Next Story