குடும்ப தகராறில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு உறவினருக்கு வலைவீச்சு


குடும்ப தகராறில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு உறவினருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே குடும்ப தகராறில் தந்தை-மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய உறவினரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது45). இவரது மகள் துர்கா. இவர் திருமணமாகி பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று துர்காவிற்கும், அவரது உறவினர் விஜயலட்சுமிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நடராஜன் தனது மகளுக்கு ஆதரவாக பேசினார். இதில் ஆத்திரமடைந்த விஜயலட்சுமியின் உறவினர் செல்வகுமார் அரிவாளால் நடராஜனை வெட்டினார். இதனை தடுக்க வந்த நடராஜன் மகன் குருபரண்(17), நடராஜனின் அக்கா புஷ்பவள்ளி(42) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக 3 பேரையும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய உறவினர் செல்வகுமாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story