ஓமலூர் அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் உயிரோடு எரித்துக்கொலை
ஓமலூர் அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை, பணத்தகராறில் உயிரோடு எரித்துக்கொலை செய்த நண்பர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னபாகல்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்தி (வயது23). இரு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இவர் சேலம் புது ரோடு அருகே செல்போன் கடை ஒன்றை நண்பர் ஒருவருடன் சேர்ந்து கூட்டாக நடத்தி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த கடையை நடத்தும் பொறுப்பை நண்பரிடம் ஒப்படைத்து விட்டு கார்த்தி விலகி விட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பாகல்பட்டி பங்களாதோட்டம் என்ற இடத்தில் கார்த்தி உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள், கார்த்தி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, கார்த்தியை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முன்னதாக போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல் வருமாறு:-
மாற்றுத்திறனாளி கார்த்தியின் நண்பர்கள் அசோகன், இன்னொரு கார்த்தி ஆவர். கார்த்தியிடம் அசோகன் ரூ.10 ஆயிரம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பலமுறை திரும்ப கேட்டும் அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தி தனது நண்பர்களான அசோகன், இன்னொரு கார்த்தி ஆகியோருடன் பாகல்பட்டி பங்களாதோட்டம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மது அருந்தினார்கள். மூவரும் மதுபோதையில் பேசிக்கொண்டு இருந்தனர்.
ஒரு கட்டத்தில் மாற்றுத்திறனாளி கார்த்தி, தன்னிடம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை அசோகனிடம் திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு போதையிலும் தெளிவாக இருக்கிறானே! என்று கூறியவாறு நண்பர்கள் இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து மாற்றுத்திறனாளி கார்த்தி உடல் மீது ஊற்றி, உயிரோடு தீ வைத்து எரித்துவிட்டு ஓடிவிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த பயங்கர கொலை குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நண்பர்கள் அசோகன், மற்றொரு கார்த்தி ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story