ரூ.50 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்


ரூ.50 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:39 AM IST (Updated: 17 Dec 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

கோ.ப.செந்தில்குமார் பிறந்த நாள் விழாவையொட்டி ரூ.50 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இளைய மகனும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவருமான கோ.ப.செந்தில்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அவர் பங்காரு அடிகளாரிடம் ஆசிபெற்றார். ஆதி பராசக்தி அன்னையை வணங்கி கல்லூரி அரங்கில் பிறந்தநாள் கேக் வெட்டினார்.

கடப்பாக்கம் மீனவ குடும்பத்திற்கு படகு என்ஜின், 20–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், என்ஜினீயரிங் கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என்று மொத்தம் ரூ.50 லட்சத்திற்கான நலதிட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் தமிழ்வேந்தன், நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், கண்காணிப்பாளர் பட்டு, என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் ராகராஜன், நிர்வாக அலுவலர் ஏழுமலை, இயக்குனர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிறந்தநாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணியினரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் இயக்கத்தினர் செய்திருந்தனர்.


Next Story