போதைக்கு எதிராக பெண்களின் மேளம்
மது மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக போராட 30 பெண்கள் ஒன்றிணைந்து ‘கிரீன் கேங்க்’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
மது மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக போராட 30 பெண்கள் ஒன்றிணைந்து ‘கிரீன் கேங்க்’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் பச்சை நிற புடவை அணிந்து உலா வருகிறார்கள். போதை, குடிப்பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் ஆண்களை அதில் இருந்து மீட்பதே இந்த குழுவினரின் முக்கிய நோக்கம்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனையில் இந்த பசுமைப்படை உதயமாகி இருக்கிறது. இதுபற்றி திவ்யான்சு என்ற மாணவர் கூறுகையில், ‘‘நான் என் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி தனது இரண்டு குழந்தைகளுடன் சாலையோரம் இருந்த குப்பைத் தொட்டியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். பின்னர் அதில் இருந்து சில ரொட்டித் துண்டுகளை எடுத்து தன் குழந்தைகளின் பசியை போக்கிக்கொண்டிருந்தார். அவருடைய கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதே இந்த அவல நிலைக்கு காரணம். அந்த சம்பவம் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிட்டது’’ என்கிறார்.
மாணவர்கள் வாரணாசி மாவட்டத்திலுள்ள குஷியாரி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தபோது அங்கு அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுவதை பார்த்திருக்கிறார்கள். அங்குள்ள ஆண்கள் குடிப் பழக்கத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமைப்பட்டு கிடந்திருக்கிறார்கள். மேலும் ஆண்கள் குடித்துவிட்டு இரவில் மனைவியை அடித்து துன்புறுத்துவதையும் பார்த்திருக்கிறார்கள்.
‘‘பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் எங்களிடம் பேச தயங்கினார்கள். கணவர்மார்கள் இல்லாதபோதுதான் தங்கள் மனக்குமுறல்களை கொட்டினார்கள். ஒரு இடத்தில் நான்கு இளைஞர்கள் குழுவாக அமர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குடி போதையில் இருப்பதையும், இரவில் மனைவிமார்களை அடித்து துன்புறுத்துவதையும் அறிந்துகொள்ள முடிந்தது. அங்குள்ள பெண்களிடம் கல்வியின் முக்கியத்தை பற்றி கூறினோம். நிறைய பெண்களுக்கு தங்களுடைய பெயரை எழுத தெரியவில்லை. அவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுத்தோம். வங்கி கணக்குகளை தொடங்குவதற்கு ஊக்குவித்தோம். எங்கள் குழுவினர் பெண்களுக்கு தற்காப்பு கலைகளையும் சொல்லிக் கொடுத்தார்கள்’’ என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.
தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்ற பெண்கள் ஆஷா தேவி என்பவர் தலைமையில் குழுவாக இயங்க தொடங்கி விட்டார்கள். குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் பணத்தை செலவளிக்கும் ஆண்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒருவரும் காது கொடுத்து கேட்கவில்லை. இதையடுத்து பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடும் ஆண்களை விரட்டி அடித்திருக்கிறார்கள். இரவில் குடித்துவிட்டு வந்து சண்டையிடும் கணவர்மார்களை எதிர்த்து கேள்வி கேட்கவும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறார்கள். அதனால் இப்போது அந்த கிராமத்தில் குடித்துவிட்டு சண்டைபோடும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
‘‘பெண்கள் தங்கள் மீது திணிக்கப்படும் வன்முறையை சுமக்க வேண்டியதில்லை என்று, அதை எதிர்த்து போராட முடிவு செய்தோம். இப்போது பொது இடத்தில் உட்கார்ந்து எவரும் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை’’ என்கிறார், ஆஷா தேவி.
பச்சைப்புடவை உடுத்திய பசுமைப்படை பெண்கள், வாரணாசி மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று குடிப்பழக்கம்் மற்றும் சூதாட்டத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆண்கள் கூடியிருக்கும் இடங்களில் மேளம் அடித்தும் கையெடுத்து கும்பிட்டும் இவர்கள் மேற்கொண்டுவரும் பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மது, போதை பழக்கம், சூதாட்டம் மட்டுமின்றி தூய்மை, சுகாதாரம், கல்வி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
‘‘வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்த நாங்கள் தைரியமாக எங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் செயல்பாடுகளால் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போடும் ஆண்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மாணவர்கள் எங்களுக்கு கொடுத்த தைரியமே முக்கிய காரணம்’’ என்று பாதிக்கப்பட்டிருந்த பெண்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

Related Tags :
Next Story