திருவள்ளூர் அருகே ரே‌ஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவள்ளூர் அருகே ரே‌ஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2017 4:03 AM IST (Updated: 18 Dec 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே ரே‌ஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவூர் காலனியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெங்கடேசன் பெரியகளகாட்டூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடை ஒன்றில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபித்துக்கொண்ட வெங்கடேசன், வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார்.

நேற்று முன்தினம் மாலை அவர் ஜாகீர்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story