மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு கல்வீடு கட்ட நிதியுதவி நாராயணசாமி வழங்கினார்


மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு கல்வீடு கட்ட நிதியுதவி நாராயணசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

புதுவை குடிசைமாற்று வாரியத்தின் மூலம் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 105 பயனாளிகளுக்கு முதல் தவணை தொகை வாங்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை குடிசைமாற்று வாரியத்தின் மூலம் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்த 105 பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையாக ரூ.70 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டது. இதேபோல் பெருந்தலைவர் காமராஜர் இலவச கல்வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 2–வது மற்றும் 3–வது தவணையாக ரூ.60 ஆயிரம், 70 ஆயிரத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய தலைவர் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., குடிசைமாற்று வாரிய முதன்மை செயல் அலுவலர் லாரன்ஸ் குணசீலன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சுதர்சனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story