பனிக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்
பனியில் நனைந்ததால், சளித்தொல்லை என பனியைக் குற்றம் சொல்லிக் கொண்டு டாக்டரிடம் செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.
பனியில் நனைந்ததால், சளித்தொல்லை என பனியைக் குற்றம் சொல்லிக் கொண்டு டாக்டரிடம் செல்வோரின் எண்ணிக்கை அதிகம். 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அதையே பத்து மிளகு இருந்தால் பனிக்கால நோய்களையும் தவிர்க்கலாம் என்ற புதுமொழியையும் சேர்த்துக் கொள்ளலாம். பனிக்காலத்தில் உணவில் மிளகுத் தூளை தூவிச் சாப்பிடுவது நல்லது. பாலில் மிளகுத்தூள் கலந்து பருகுவதாலும் பனிக்காலக் கப நோய்களை தடுக்கலாம்.
மிளகில் உள்ள பெப்பரின், பினைன் வேதிப்பொருட்கள், செரிமான சக்தியை அதிகரிப்பதுடன், நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கின்றன. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், மிளகுத் தூளை சற்றுக் குறைத்து பயன்படுத்துவது நல்லது. மாலைப் பொழுதில் மிளகு, பூண்டு கலந்த ஆட்டுக்கால் சூப், உடலுக்கு வெப்பம் தரும் நண்டு ரசம் ஆகியவற்றை அருந்தலாம்.
பனிக்காலத்தில் உண்டாகும் உதட்டு வெடிப்புக்கு வெண்ணெய் அல்லது நெய் தடவி வரலாம். தோலில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கவும், குளிர் காலத்தில் தாக உணர்வு குறைந்திருந்தாலும், தேவையான அளவு காய்ச்சிய வெந்நீரைக் குடிப்பது அவசியம். வெளிப் பிரயோகமாக அருகன் தைலம், குங்கிலிய வெண்ணெய் போன்ற சித்த மருந்துகளைப் பயன்படுத்தி வந்தால் தோல் வறட்சியின் தீவிரம் குறையும்.
அசைவப் பிரியர்கள், முன் பனிக்காலத்தில் விருப்பமான அசைவ உணவை அவ்வப்போது சாப்பிடலாம். நோய்களுக்குக் காரணமாக அமையும் கொழு கொழு பிராய்லர் கோழி ரகங்களைத் தவிர்த்துவிட்டு, நாட்டுக்கோழி வகையை உண்ணலாம்.
எகிப்திய நாகரிகத்திலும் சரி, நம்முடைய சிந்து சமவெளி நாகரிகத்திலும் சரி, கோதுமை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கோதுமை ரொட்டிக்கு, திராட்சை சாற்றைத் தொட்டுச் சாப்பிடுவது கிரேக்க நாகரிகத்தில் செழித்திருந்த உணவு முறை. முன் பனிக்காலத்தில் உடலுக்குத் தேவையான பித்தத்தைக் கொடுத்து உடலை உறுதியாக்கும் தன்மை கோதுமைக்கு உண்டு.

Related Tags :
Next Story