கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
x
தினத்தந்தி 20 Dec 2017 4:00 AM IST (Updated: 20 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ் வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத் துள்ள கங்கை கொண்ட சோழ புரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரக பீடம், ஒரே கல்லில் அமைந்துள்ளது சிறப்பாகும்.சிருஷ்டி ஏற்பட்ட போது முதலில் சூரியன் தோன்றினார்.சூரியனிடம் இருந்து மற்ற 8 கிரகங்கள் தோன்றின.இந்த தத்துவத்தை உணர்த்தும் விதமாக ஒரே கல்லின் நடுவில் சூரிய எந்திரன் பதும பீடத்தில் நிலைபெற்றிருக்கிறது. மற்ற 8 கிரகங்களும் வேறுவேறு திசைகளை நோக்கி அமைக்கப் பட்டுள்ளது. சனிபகவான் இரண்டு சக்கரங்களுடன் 7 குதிரை பூட்டிய ரதத்தை மேற்கு முகமாக செலுத்துவது போன்று உள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நேற்று காலை 9.59 மணிக்கு சனிபகவான் இடம் பெயர்ந்தார். இந்த சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜை யும், மற்ற ராசிக்காரர்கள் சிறப்பு தரிசனமும் செய்ய கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவி லின் நவக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப் பட்டது. அப்போது பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பயபக்தி யுடன் சனிபகவானை வழிபட் டனர். இதற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத் துறை தக்கார் செந்தில்குமார், செயல் அலுவலர் பரிமணம் மற்றும் தொல்பொருள் துறை பணி யாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இதேபோலஅரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.

விழாவையொட்டி சனீஸ் வர பகவானுக்கு மஞ்சள், சந்தனம், மாவுப் பொடி, திரவியப்பொடி, பன்னீர், தேன், பால், தயிர் உள்ளிட்டவற்றால் அபிஷேக மும், யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரால் அபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு சனீஸ் வரருக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எள் தீபமிட்டு வழிபாடு செய்தனர்.

மேலும், திருமானூர் சக்தி விநாயகர் கோவில், கீழப்பழு வூர் ஆலந்துறையார், வேத புரீஸ்வரர், கார்கோடேஸ் வரர், விசுவநாதர், வாரண வாசி ஸ்ரீ கல்யாணசுந்தர விநா யகர், திருமழபாடி வைத்திய நாதசுவாமி கோவில் உள் ளிட்ட சிவாலயங்களிலும் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு கள் நடத்தப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறை குற்றம்பொருத்தவர் கோவி லில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. கருப்பு துணியில் எள் முடி யப்பட்டு அதை விளக்காக ஏற்றினர். இதேபோல் வாலி கண்டபுரம், ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில், அத்தியூர் மற்றும் ஒகளுர் சிவன் கோவில்களிலும் பூஜைகள் நடந்தன.

பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத் தில் உள்ள பெரியநாயகியம்மன் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

அரியலூர் முருகன் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம்- விளந்தையில் உள்ள மேலஅகத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள சனி பகவானுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தயிர், பன்னீர், திரவியம், களபம் உள்பட 14 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சனி பகவானுக்கு மகாதீபாராதனை காட்டப் பட்டது.

ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் செட்டிகுளம், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், இரூர், பாடாலூர், நாரணமங்கலம், மருதடி, குரூர், புது வயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜூ மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

பாடாலூர் கைலாசநாதர் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. 

Next Story