தலமலை வனப்பகுதி சாலையில் கரடி நடமாட்டம்


தலமலை வனப்பகுதி சாலையில் கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2017 3:00 AM IST (Updated: 20 Dec 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

தலமலை வனப்பகுதி சாலையில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திற்குட்பட்டது தலமலை வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்டெருமை, கரடி மற்றும் மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

திம்பத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடி செல்லும் ரோடு அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது. இந்த ரோடு முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இதில் வனத்துறை அனுமதியுடனே பயணம் செய்யமுடியும்.

இந்த நிலையில் தலமலை அருகே உள்ள மாவநத்தம் வனப்பகுதி சாலையின் ஓரமாக கரடி ஒன்று நேற்று சாதாரணமாக நடந்து சென்றது. இதை அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள் படம் எடுத்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்ட அதிகாரி பத்மா கூறுகையில், ‘தலமலை பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே தலமலை ரோட்டின் வழியாக இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் கிராம மக்கள் பாதுகாப்பாக செல்லவேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


Next Story