காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடைவிதிக்க வேண்டும்
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்,
வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாகூரில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வணிகர் சங்க துணை தலைவர் சரவணபெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் மன்சூர்ஷா, துணை செயலாளர்கள் ராஜா, ஹிமாயத்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கரிகாலன் வரவேற்றார். பொருளாளர் ஜெபர்சாதிக் வரவு-செலவு அறிக்கையையும், செயலாளர் ரவி ஆண்டறிக்கையையும் வாசித்தனர். துணை தலைவர் சரவணபெருமாள் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
நாகூர் கடைத்தெரு முகப்பில் நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும். நாகூர் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்த குப்பை தொட்டிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் குப்பைகளை தெருக்களில் கொட்டி செல்கின்றனர். எனவே மீண்டும் குப்பை தொட்டிகளை அந்தந்த இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகூர் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும்.
மீன்வள பல்கலைக்கழகம்
நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும். நாகையில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி துகள்கள் காற்றில் பறந்து குடிநீரிலும், உணவிலும் கலந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும். நாகூர் கொத்தால்சாவடியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் தலைவர்கள் ரவிந்திரன், பிலிப்ராஜ், முகமதுரவூப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் முகமதுயூசுப் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story