குஜராத் தேர்தல் முடிவு ‘பா.ஜனதாவுக்கு எச்சரிக்கை மணி’ சிவசேனா கடும் தாக்கு

“குஜராத் தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எச்சரிக்கை மணி” என்று சிவசேனா விமர்சித்து உள்ளது.
மும்பை,

குஜராத் தேர்தல் முடிவை சுட்டிக்காட்டி பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:-
எச்சரிக்கை மணி
எதேச்சதிகாரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு குஜராத் சட்டசபை தேர்தல் முடிவு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது. தேர்தலில் பா.ஜனதா வென்று இருக்கலாம். ஆனால், ராகுல்காந்தியின் முன்னேற்றம் பற்றி தான் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா தம்பட்டம் அடித்தது. ஆயினும், 100 இடங்களில் வெற்றி பெறுவது கூட கடினமான இலக்கு என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
குஜராத்தில் ராகுல்காந்தி மற்றும் ஹர்திக் பட்டேலின் உத்தமமான செயல்பாடுகளுக்கு செவிசாயுங்கள். குஜராத் மக்கள் 99 தொகுதிகளில் மோடிக்கு பின்னால் நின்றாலும், ராகுல்காந்தி- ஹர்திக் பட்டேல் அணி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ராகுல்காந்தியையும், ஹர்திக் பட்டேலையும் குரங்குகள் என்று ஏளனம் செய்தார்கள்.
பாசாங்கு
இன்றைக்கு இந்த குரங்குகள், சிங்கத்தை அறைந்துவிட்டன. பா.ஜனதாவுக்கு எச்சரிக்கை மணியை ஒலித்துவிட்டன. இதுபோல் ஏளனம் செய்தவர்கள், தேர்தல் பரீட்சையில் மிகவும் அரிதாகவே வெற்றி பெற்ற போதிலும், ஏதோ தனித்துவத்துடன் வெற்றி பெற்று விட்டதாக பாசாங்கு செய்கிறார்கள்.
2019 தேர்தல்கள் இதேபோல் குழம்பிப்போய் விட கூடாது என்று மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ என்ற கனவு இன்னமும் நிறைவேறாமலேயே இருக்கிறது.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story