ஆயுதங்கள் திருடி கடத்தி வந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் மும்பையில் கைது


ஆயுதங்கள் திருடி கடத்தி வந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் மும்பையில் கைது
x
தினத்தந்தி 20 Dec 2017 3:15 AM IST (Updated: 20 Dec 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

கான்பூரில் இருந்து ஆயுதங்களை திருடி கடத்தி வந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

கான்பூரில் இருந்து ஆயுதங்களை திருடி கடத்தி வந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்கள் கடத்தல்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குடோனில் ஆயுதங்களை திருடி வந்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன் நாசிக்கில் பிடிபட்டது. போலீசார் அந்த கும்பலிடம் இருந்து 45 துப்பாக்கிகள், 4 ஆயிரத்து 166 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆயுதங்களை திருடி வந்த நாசிக் வடலா பகுதியை சேர்ந்த நாகேஷ், மும்பை சிவ்ரியை சேர்ந்த சல்மான் அமனுல்லா, சுமித் ஆகிய 3 பேரை கைது செய்து இருந்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்தநிலையில் இந்த ஆயுத திருட்டில் தொடர்புடைய மும்பையை சேர்ந்த ஆமீர் ரசித் சேக் என்பவர் சிவ்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக நாசிக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை வந்த அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் சிவ்ரி பகுதியில் வைத்து ஆமீர் ரசித் சேக்கை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆமீர் ரசித் சேக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கான்பூரில் திருடிய ஆயுதங்களை வேனில் அனுப்பிவிட்டு ரெயில் மூலம் மும்பை வந்ததாக போலீசார் கூறினர்.

Next Story