கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை,
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லையப்பர் கோவில்நெல்லையப்பர் கோவில் பாண்டியர்கால சிவ ஆலயங்களில் பழமையானது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலில் ஆனித்தேரோட்டம், ஐப்பசி திருக்கல்யாணம், ஆடி வளைகாப்பு வைபவம், ஆவணி மூல திருவிழா, தைப்பூச தீர்த்தவாரி, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம், வைகாசி விசாகம், நவராத்திரி விழா, திருவாதிரை திருவிழா, மாசி அப்பர் தெப்ப திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பு பெற்றதாகும்.
இந்த கோவிலில் கடந்த 2004–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள். வருகிற ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து கடந்த 30–ந்தேதி பாலாலய பூஜை நடந்தது.
வர்ணம் பூசும் பணிபாலாலயம் முடிந்த பிறகு அனைத்து பரிவார தேவதைகளின் சிலைகளும் துணியால் மூடப்பட்டு அங்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சன்னதியிலும் தரைகளை சரிசெய்யும் பணி உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் கோபுரங்கள், விமானங்கள் மற்றும் சின்ன சன்னதிகளில் உள்ள விமானங்கள் ஆகியவற்றை சீரமைத்து வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விமானங்களில் உள்ள சிற்பங்களுக்கும், சிலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது.
அம்மன் சன்னதி, சுவாமி சன்னதிக்கு பின்புறம் உள்ள தாமிர சபை பகுதியில் உடைந்து கிடக்கின்ற தரைகளை சரிசெய்யும் பணி, தூண்களை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.