பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:15 AM IST (Updated: 21 Dec 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.டி.யு.சி. சார்பில், கம்பம் ஏ.எம்.சர்ச் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கம்பம்,

ஏ.ஐ.டி.யு.சி. சார்பில், கம்பம் ஏ.எம்.சர்ச் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெரு வியாபார தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி.யு.சி) மாவட்ட தலைவர் அஜ்மல்கான் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுந்தரராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன், மாநிலக்குழு உறுப்பினர் மூக்கையா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கம்பம் நகராட்சி சார்பில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தில் மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், டாஸ்மாக், கூட்டுறவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். சங்கிலிக்கரடு கல்குவாரியை ஏலம் விட வேண்டும். ஜவுளி தொழிலாளர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறுதொழில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியபாரிகள், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story