குன்னூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


குன்னூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் குன்னூர் வி.பி. தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குன்னூர்,

மணல் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தாலுகா அளவில் மாநில அரசு மணல் குடோன்களை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் குன்னூர் வி.பி. தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆல்தொரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சங்க பொதுச்செயலாளர் குப்புசாமி தொடங்கி வைத்தார்.

இதில் சங்க தலைவர் ஆல்தொரை பேசியதாவது:–

மணல் விலை ஏற்றத்தால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. 2 யூனிட் மணல் ரூ.1080–க்கு அரசு கொடுக்கிறது. ஆனால் வெளிமார்க்கெட்டில் 2 யூனிட் மணல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படு கிறது. இதை கட்டுப்படுத்த அதிக மணல் குவாரிகளை திறக்க வேண்டும். தமிழ்நாடு கனிம வள நிறுவனம் மூலம் தரமான மாற்று மணல் தயாரித்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story