கவரப்பேட்டை அருகே மணல் திருட்டு; லாரி பறிமுதல்


கவரப்பேட்டை அருகே மணல் திருட்டு; லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் மணலுடன் ஒரு லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பம் கிராமத்தில் ஆரணி ஆற்றுப்படுகையில் சிலர் லாரி மூலம் மணல் திருட்டில் ஈடுபடுவதாக கவரைப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் தங்களது லாரிகளை எடுத்துக்கொண்டு தப்பினர். இருப்பினும் மணலுடன் ஒரு லாரியை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். ஆனால் அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். லாரியுடன் மணலை பறிமுதல் செய்த கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story