போக்குவரத்துத் துறையில் காலதாமத கட்டணம் வசூலிப்பது நிறுத்தம் அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு


போக்குவரத்துத் துறையில் காலதாமத கட்டணம் வசூலிப்பது நிறுத்தம் அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுவை போக்குவரத்துத் துறையில் காலதாமத கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுவை போக்குவரத்துத்துறையில் காலதாமதமாக புதுப்பிக்கப்படும் டிரைவிங் லைசென்சு, தகுதி சான்றிதழ், தடையில்லா சான்றிதழ், பதிவு சான்றிதழ் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஆணையின்படி காலதாமத கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைக்கத்தின் ஆணை தொடர்பாக பல்வேறு போக்குவரத்து அமைப்புகள் சென்னை ஐகோர்ட்டை அணுகினார்கள். அதன் விளைவாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஆணையின்படி வசூலிக்கப்பட்டு வந்த காலதாமத கட்டணம் உடனடியாக நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story