பாரிமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை


பாரிமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

பாரிமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ராயபுரம், 

சென்னை வில்லிவாக்கம் தாயகிணறு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் 2013-ம் ஆண்டு பாரிமுனை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் குமாரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிந்து தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (24), ஹேம்நாத் (23), விஜயராஜா (30), திருநாவுக்கரசு (32) ஆகியோரை கைது செய்து ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு 18-வது கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன், வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Next Story