கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,

அரியலூர் அண்ணா சிலை அருகே கட்டுமான தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிற்றம்பலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மணல் விலையேற்றத்தை தடுக்கும் பொருட்டு எம்.சேண்ட் மணல் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story