4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் தமிழ் செல்வி, சீதா லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவது போல் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியத்தை வழங்கி, காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வரவேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும், 1–1–2016 முதல் ஊதியக்குழு நிலுவை தொகையை ரொக்கமாக வழங்கவேண்டும், மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரெங்கராஜ், செயலாளர் சம்பத், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சாவித்திரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் சீருடையுடன் கலந்து கொண்டனர்.


Next Story