மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் ஷேர் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலி
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் ஷேர் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர்-உறவினர்கள் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க செய்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவர், பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள நிலஅளவைத்துறையில் கள உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக்(வயது 17). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மாலை இவர் சொந்த விஷயமாக தாலுகா அலுவலகத்தில் உள்ள தனது தந்தையை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் ஸ்டேட் வங்கி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அபிஷேக் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த ஷேர் ஆட்டோவின் சக்கரத்தில் சிக்கிய அபிஷேக் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
டிரைவர் கைது
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அபிஷேக்கை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிஷேக் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பதறி அடித்து கொண்டு அபிஷேக்கின் பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அபிஷேக் உடலை பார்த்து அவர்கள் கதறி துடித்தது காண்போரையும் கண் கலங்க செய்தது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஷேர் ஆட்டோ டிரைவர் குன்னம் தாலுகா வரகுபாடியை சேர்ந்த ராஜாவை(24) கைது செய்தனர்.

Related Tags :
Next Story