மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்


மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:00 AM IST (Updated: 22 Dec 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம் விடப்பட உள்ளது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சின்ன காஞ்சீபுரம் நத்தப்பேட்டை திருவீதிபள்ளத்தில் உள்ள காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க விரும்புவோர் தங்களது ரேஷன்கார்டு நகலுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 முன்வைப்பு தொகையாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் பணமாக செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் விற்பனை வரி 28 சதவீதத்தை உடனடியாக செலுத்தவேண்டும். ஏலத்தில் கலந்துகொண்டு வாகனம் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்புத்தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story