தேசிய நெடுஞ்சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி
சாலை விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது.
விழுப்புரம்,
தமிழகத்திலேயே தேசிய நெடுஞ்சாலைகள் அதிக தூரம் கொண்ட மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது. விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறை செய்து வருகிறது.
மேலும் அதிவேகமாக வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் விதமாக வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கவும், கடந்த சில ஆண்டுகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட காவல்துறையும், வட்டார போக்குவரத்து துறையும் இணைந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் உதவியுடன் தரமான முறையில் அதாவது ஒவ்வொன்றும் 133 கிலோ எடை கொண்டதாக 50 இரும்பு தடுப்புகள் தயார் செய்யப்பட்டன.
இவை நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் முதல் உளுந்தூர்பேட்டை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் நடைபெறும் பகுதி, ஆபத்தான வளைவு என 25 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு அமைக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சங்கர், திருமால், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாலகுருநாதன், சவுந்தர்ராஜன், பார்வேந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், கவிதா, பிரான்சிஸ், பெரியசாமி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே கண்டறியப்பட்ட விபத்து பகுதிகள் மற்றும் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்ட இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைத்து சீரான முறையில் இயக்குவதற்கு ஏதுவாக இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது திண்டிவனம்- உளுந்தூர்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலையில் 50 இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக 50 இரும்பு தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதேபோல் படிப்படியாக மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

Related Tags :
Next Story