2ஜி வழக்கு தீர்ப்பு எதிரொலி: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


2ஜி வழக்கு தீர்ப்பு எதிரொலி: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:45 AM IST (Updated: 22 Dec 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

2ஜி வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை, வெள்ளகோவில், மூலனூரில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

உடுமலை,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாவின் முழு உருவ சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

நிகழ்ச்சிக்கு உடுமலை நகர தி.மு.க. செயலாளர் எம்.மத்தீன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் எம்.ஏ.கே.ஆசாத், பொருளாளர் சொர்க்கம் பழனிச்சாமி, முன்னாள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் யு.என்.பி.குமார், இந்துபாய், தனபால், தெண்டபாணி, ஆதம்ஷா உள்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

வெள்ளகோவில் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் வெள்ளகோவில் மூன்று முக்கில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பாலசுப்பிரமணி, நகர செயலாளர் ராசி முத்துகுமார், துணை செயலாளர் சபரிமுருகானந்தன், அவைத்தலைவர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் மூலனூர் தி.மு.க. ஒன்றியம், பேரூர் சார்பில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கு மூலனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். விழாவில் மூலனூர் பேரூர் கழகம் சார்பில் பேரூர் இளைஞர் அணி செயலாளர் சரவணன், மற்றும் பேரூர் தி.மு.க. உறுப்பினர்கள் மூலனூர்-வெள்ளகோவில் பிரிவு, வடுகப்பட்டி பிரிவு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இதுபோல் காங்கேயம் ரவுண்டானா பகுதியில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் நகர செயலாளர் மணிவண்ணன், வடக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிதம்பரம் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்டுபாய் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story