சாந்தாகுருசில், தமிழர்களின் குடிசைகள் இடிக்கப்பட்டதற்கு சட்டசபையில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கண்டனம்


சாந்தாகுருசில், தமிழர்களின் குடிசைகள் இடிக்கப்பட்டதற்கு சட்டசபையில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கண்டனம்
x
தினத்தந்தி 22 Dec 2017 3:30 AM IST (Updated: 22 Dec 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

சாந்தாகுருசில், தமிழர்களின் குடிசைகள் இடிக்கப்பட்டதற்கு சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தனது கண்டனத்தை பதிவு செய்தார். சட்டசபையில் கண்டனம் மும்பை சாந்தாகுருஸ், வக்கோலா பகுதியில் அதிகளவு தமிழர்கள் வசித்து வந்தனர். இவர்களது குடிசை வீடுகள்

மும்பை,

சாந்தாகுருசில், தமிழர்களின் குடிசைகள் இடிக்கப்பட்டதற்கு சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

சட்டசபையில் கண்டனம்

மும்பை சாந்தாகுருஸ், வக்கோலா பகுதியில் அதிகளவு தமிழர்கள் வசித்து வந்தனர். இவர்களது குடிசை வீடுகள் சமீபத்தில் மாநகராட்சியினரால் இடித்து அகற்றப்பட்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் தமிழர்கள் வீடுகளை இழந்து தவித்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து நேற்று சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார். அவர் பேசியதாவது:–

மாநகராட்சி உரிய அங்கீகாரம் பெற்ற வீடுகளை இடிக்கும்போது அதில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும். ஆனால் சாந்தாகுருஸ் பகுதியில் வசித்த தமிழ் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்காமல் மாநகராட்சி அவர்களின் குடிசைகளை இடித்து தள்ளியது. கோர்ட்டு தடையை மீறி மும்பை மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சயானில் ஆஸ்பத்திரி

மாநகராட்சியினர் அராஜகமாக நடந்து வருகின்றனர். ஒரு வார்டுக்கு ஒரு காய்கறி மார்க்கெட் வைக்க மாநகராட்சி அனுமதி அளிக்கவேண்டும். ஆனால் எனது தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில், ஒரு வார்டில் கூட மாநகராட்சி அனுமதி பெற்ற காய்கறி மார்க்கெட் இல்லை. காய்கறி மார்க்கெட்டிற்கு அனுமதி வாங்கவேண்டும் என்றால் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அவர் சயானில் புதிய ஆஸ்பத்திரி கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டசபையில் வலியுறுத்தினார்.


Next Story