வரத்து அதிகரிப்பால் தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்து உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்து உள்ளது.
காய்கறிகள் வரத்து அதிகரிப்புதூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பெரும்பாலான குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஓட்டப்பிடாரம், பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அங்கு காய்கறிகள் விளைச்சல் நன்றாக உள்ளது.
இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை குறைந்து உள்ளது. கடந்த வாரம் ரூ.50–க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.10–க்கு விற்பனையானது. கத்தரிக்காய், வெங்காயம், கேரட் ஆகியவை மட்டும் சற்று அதிக விலைக்கு விற்பனையானது. மற்ற அனைத்து காய்கறிகளும் விலை குறைந்து உள்ளது.
விலை விவரம்தூத்துக்குடியில் நேற்று காய்கறிகள் விலை விவரம்(1 கிலோ) வருமாறு:–
கத்தரிக்காய்– ரூ.40–50
தக்காளி – ரூ.10
மிளகாய் – ரூ.10–15
கேரட்– ரூ.20
வெண்டைக்காய்– ரூ.10
அவரைக்காய்– ரூ.20
பல்லாரி– ரூ.50
சிறியவெங்காயம் – ரூ.80
பீன்ஸ்– ரூ.20
உருளைக்கிழங்கு– ரூ.15