ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 23 Dec 2017 3:45 AM IST (Updated: 23 Dec 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், மேலாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

காஞ்சீபுரம்,

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மதுராந்தகம்-திருக்கழுக்குன்றம் சாலை அரையப்பாக்கம் என்ற இடத்தில் 13 ஏக்கர் நிலத்தை வாங்கி மனைகளாக பிரித்துள்ளார். மனைகளை பதிவு செய்ய மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சி) செல்வின் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் சீனிவாசன் ரூ.1¼ லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வினை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அதற்கு உடந்தையாக இருந்ததாக ஊராட்சி ஒன்றிய மேலாளர் மோகனும் கைது செய்யப்பட்டார்.

சோதனை

கைது செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வின் வீடு செய்யூரில் உள்ளது. அவரது வீட்டில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் சாலவாக்கத்தில் உள்ள மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய மேலாளர் மோகனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அங்கும் முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்கள் செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தெரிவித்தார். 

Next Story