வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையே மோதல் 6 பேர் கைது
மீஞ்சூர் அருகே வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூர்
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் 3-வது அலகில் 800 மெகாவாட் மின்உற்பத்திக்காக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்கு ஒப்பந்த தொழிலாளர்களை அனுப்பி வைப்பதில் பிரச்சினை இருந்து வந்தது.
இரு நாட்களுக்கு முன் எண்ணூரை சேர்ந்த முருகவேல், அனல்மின் நிலையத்தில் தன்னுடைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நுழைவு அட்டை வழங்குவதற்காக காரில் சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் உருட்டுக்கட்டை, கத்தியுடன் வந்து என்னையும், என் மைத்துனர் முருகவேலையும் தாக்கியதாக மீஞ்சூர் போலீசில் யோகானந்த் (வயது 38) புகார் செய்தார்.
கைது
அதேபோல் முருகவேல், யோகானந்த் மற்றும் சில ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களை தாக்கியதாக தாழங்குப்பத்தை சேர்ந்த தயாளன் (40) மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.
இரு தரப்பு புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பை சார்ந்த குமரவேல், ஜெகதீசன், வசந்த் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story